தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி தொடக்கம்

நடப்பாண்டு விழாவின் முதல் நாளான நேற்று காலை மகா கணபதி ஹோமம், அபிஷேகம், வராஹி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. நேற்று மாலை இனிப்பு அலங்காரத்தில் வராஹி அம்மன் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

Jun 26, 2025 - 06:20
 0  2
தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி தொடக்கம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி, வராஹி அம்மன் இனிப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

தஞ்சாவூர் பெரிய கோயிலின் தெற்கு புறத்தில் மிகவும் பழமையான வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா ஒவ்வோர் ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டு விழாவின் முதல் நாளான நேற்று காலை மகா கணபதி ஹோமம், அபிஷேகம், வராஹி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. நேற்று மாலை இனிப்பு அலங்காரத்தில் வராஹி அம்மன் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow