தூத்துக்குடி | குலசை முத்தாரம்மன் கோயில் மருத்துவ மைய பணியாளர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள குலசை முத்தாரம்மன் கோயிலில் புதிய மருத்துவ மையத்தைத் திறந்து மருத்துவர், பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக அமைச்சர்கள் இன்று வழங்கினர்

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள குலசை முத்தாரம்மன் கோயிலில் புதிய மருத்துவ மையத்தைத் திறந்து மருத்துவர், பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக அமைச்சர்கள் இன்று வழங்கினர்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இன்று (13.04.2025) சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி அருள்மிகு வைகுண்டபதி பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் பெருமக்கள் கோவில்பட்டி, அருள்மிகு பூவநாதர் சுவாமி திருக்கோயில் தேரோட்ட விழாவில் கலந்து கொண்டு, வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
What's Your Reaction?