சென்னையில் பிரம்மஸ்தான மஹோத்சவம்: அம்ருதானந்தமயி வருகை
சென்னையில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற உள்ள பிரம்மஸ்தான மஹோத்சவத்தில் பங்கேற்பதற்காக அம்ருதானந்தமயி வருகை புரிந்துள்ளார்.

சென்னை: சென்னையில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற உள்ள பிரம்மஸ்தான மஹோத்சவத்தில் பங்கேற்பதற்காக அம்ருதானந்தமயி வருகை புரிந்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஐந்து ஆண்டு இடைவெளிக்கு பின்பு தனது தென்னிந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சென்னைக்கு வந்துள்ள அம்ருதானந்தமயி தேவியை பாரம்பரிய பூர்ண கும்ப மரியாதைகளுடன் சுவாமி வினயாம்ருதானந்தபுரி சென்னை பக்தர்களின் சார்பில் வரவேற்றார். மாதா அம்ருதானந்தமயி தேவியுடன் ஆயிரக்கணக்கான துறவிச் சீடர்கள், பிரம்மச்சாரிகள் மற்றும் ஆசிரமவாசிகள் சென்னை வந்துள்ளனர்.
What's Your Reaction?