திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்: அரோகரா கோஷங்களுடன் பக்தர்கள் தரிசனம்
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (மார்ச் 5) பங்குனித் திருவிழாவையொட்டி காலையில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் அரோகரா கோஷங்கள் முழங்க பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (மார்ச் 5) பங்குனித் திருவிழாவையொட்டி காலையில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் அரோகரா கோஷங்கள் முழங்க பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 5 முதல் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு கோயிலில் கம்பத்தடி மண்டபத்திலுள்ள தங்கக் கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. உற்சவர் சன்னதியிலிருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் சிம்மாசனத்தில் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகளுக்குப் பின் காலை 9.25 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதில் அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்யபிரியா, துணை ஆணையர் சூரியநாராயணன் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?