தமிழ்ப் புத்தாண்டு தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு தரிசனம்

தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நடந்த சிறப்பு தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். முருகன் கோயில்களில்  நீண்ட வரிசையில் காத்திருத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

Apr 14, 2025 - 14:20
 0  4
தமிழ்ப் புத்தாண்டு தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு தரிசனம்

சென்னை: தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நடந்த சிறப்பு தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். முருகன் கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சித்திரை முதல் நாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழ்ப் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று (ஏப்.14) முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, அத்திமரத்தாலான முருகபெருமானின் விக்கிரங்களைச் செய்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow