டெல்லியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் தமிழ் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

டெல்லிக்கு வந்த வாழும் கலை அமைப்பின் குருதேப் ஸ்ரீஸ்ரீரவிசங்கருடன் தில்லி தமிழ் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று (மார்ச் 5) நேரில் சந்தித்தனர்.

Mar 5, 2025 - 21:30
 0  4
டெல்லியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் தமிழ் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

புதுடெல்லி: டெல்லிக்கு வந்த வாழும் கலை அமைப்பின் குருதேப் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் தில்லி தமிழ் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று (மார்ச் 5) நேரில் சந்தித்தனர். அப்போது, தில்லி தமிழ் சங்கத்தின் நடவடிக்கைகளை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பாராட்டினார்.

இன்று மார்ச் 5, புதன்கிழமை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் டெல்லிக்கு வந்தார். அப்போது அவரை தில்லி தமிழ் சங்க நிர்வாகிகள், அதன் பொதுச்செயலாளரான இரா.முகுந்தன் தலைமையில் சந்தித்து ஆசி பெற்றனர். இந்த சந்திப்பின் போது தில்லி சங்கத்தின் நடவடிக்கைகளை முன்கூட்டியே அறிந்ததாகக் கூறி ஸ்ரீஸ்ரீரவிசங்கர் பாராட்டினார். மேலும் அவர், இந்திய கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கான தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பங்களிப்பை தான் அறிந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow