Sleep Divorce: திருமணம் ஆகியும் தனித்து உறங்கும் தம்பதிகள் எண்ணிக்கை அதிகரிப்பதாக ஆய்வுத் தகவல்
குறட்டை, மன அழுத்தம் மற்றும் மாறுபடும் பணி நேரம் உள்ளிட்ட காரணங்களால் சுமார் 70 சதவீத இந்திய தம்பதிகள் தனித்து உறங்குவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: குறட்டை, மன அழுத்தம் மற்றும் மாறுபடும் பணி நேரம் உள்ளிட்ட காரணங்களால் சுமார் 70 சதவீத இந்திய தம்பதிகள் தனித்து உறங்குவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது ஓய்வினை ஆரோக்கியமானதாக மாற்றும் வகையில் இந்தப் போக்கை தம்பதிகள் கடைபிடிப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் இன்றைய தம்பதியரை ஆட்டிப்படைக்கிறது விவாகரத்து. காதலித்து வாழ்வில் இணைந்தவர்களும் விவாகரத்து பெற வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. இத்தகைய நிலையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ரெஸ்மெட் என்று நிறுவனம் உறக்கம் சார்ந்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் தம்பதிகள் தனித்து உறங்குவது தெரியவந்துள்ளது.
What's Your Reaction?