உணவு சுற்றுலா: வட்டவடா ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி பழங்களை அவை வளரும் தோட்டத்திலேயே நேரடியாகப் பறித்துச் சாப்பிட ஆசையா?

Jan 29, 2025 - 15:45
 0  14
உணவு சுற்றுலா: வட்டவடா ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி பழங்களை அவை வளரும் தோட்டத்திலேயே நேரடியாகப் பறித்துச் சாப்பிட ஆசையா? அப்படியென்றால் நீங்கள் பயணப்பட வேண்டியது வட்டவடாவுக்கு! கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் வட்டவடா, தமிழ்நாட்டுக்கு வெகு அருகில்தான் இருக்கிறது.

கொடைக்கானலுக்கும் வட்டவடாவுக்கும் காட்டுவழியில் தூரம் முப்பது முதல் நாற்பது கிலோமீட்டர்தான். ஆனால், சாலை மார்க்கமாகப் பயணம் செய்தால் மூணாறு வழியாகத்தான் வட்டவடாவுக்குச் செல்ல முடியும். மூணாறிலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது வட்டவடா. கேரளத்தின் அழகிய கிராமங்களில் வட்டவடாவும் ஒன்று. ‘கேரளத்தின் காய்கறி தோட்டம்’ என்கிற சிறப்புப் பெயரும் இதுக்கு உண்டு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow