காமராஜர் படிக்காத மேதையா?
படிக்காத மேதை என்கிற அடைமொழி காமராஜருக்கு நிலைத்துவிட்டது. ஆனால், முழுமையான படிப்பறிவு கொண்டவர்கள் கூடச் சிந்திக்க முடியாத அளவுக்கு காமராஜரின் திட்டமிடலும் நடவடிக்கையும் இருந்தன.

படிக்காத மேதை என்கிற அடைமொழி காமராஜருக்கு நிலைத்துவிட்டது. ஆனால், முழுமையான படிப்பறிவு கொண்டவர்கள் கூடச் சிந்திக்க முடியாத அளவுக்கு காமராஜரின் திட்டமிடலும் நடவடிக்கையும் இருந்தன. தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தினாலும், நாளிதழ்களையும் பத்திரிகைகளையும் வாசிக்கும் பழக்கத்தை இளம்பருவத்திலேயே வளர்த்துக்கொண்டார்.
அனுபவம் உள்ளவர்கள் பேசுவதை ஆழ்ந்து கவனித்து, அடிப்படையான செய்திகளை உள்வாங்கிக்கொள்ளும் கேள்வி அறிவும் காமராஜருக்கு இருந்தது. விருதுநகரில் இருந்த ஒரு பெட்டிக்கடைதான் காமராஜரை, தன் குடும்பத்தினர் வழிகாட்டிய துணிக்கடை வணிகத்திலிருந்து விடுதலைப் போராட்டத்துக்குத் திருப்பி விட்டதாகக் கூறப்படுகிறது.
What's Your Reaction?