காமராஜரின் சிறைவாசம்!
தமிழ்நாட்டில் அந்தப் போராட்டத்துக்கு ராஜாஜி தலைமையில் திருச்சி முதல் வேதாரண்யம் வரை தொண்டர்கள் சென்றனர். அப்போராட்டத்தில் தமது ஆதரவாளர்களுடன் பங்கெடுத்த காமராஜர் கைது செய்யப்பட்டார்.

சுதந்திரப் போராட்டத்தில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட காமராஜர், 1923இல் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் பங்கேற்றார். 1930இல் பிரிட்டிஷ் அரசு நிர்வாகம் கொண்டுவந்த உப்புச் சட்டத்தை எதிர்த்து காந்தி உப்புச் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். தமிழ்நாட்டில் அந்தப் போராட்டத்துக்கு ராஜாஜி தலைமையில் திருச்சி முதல் வேதாரண்யம் வரை தொண்டர்கள் சென்றனர். அப்போராட்டத்தில் தமது ஆதரவாளர்களுடன் பங்கெடுத்த காமராஜர் கைது செய்யப்பட்டார்.
இதற்காக அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கல்கத்தாவில் உள்ள அலிபூர் சிறையில் காமராஜர் அடைக்கப்பட்டார். எனினும், 1931இல் காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின்படி அவர் 1931 மார்ச்சில் விடுவிக்கப்பட்டார். இதுவே, காமராஜர் பொது வாழ்வில் எதிர்கொண்ட முதல் சிறைவாசம்.
What's Your Reaction?