உணவு சுற்றுலா: கோவில்பட்டி கடலைமிட்டாய்

ஊர்ப்பெயரை உச்சரித்ததும் வாசனையைக் கமகமக்கச் செய்யும் சக்தி சில ஊர்களுக்கு உண்டு!

Jun 4, 2025 - 14:45
 0  16
உணவு சுற்றுலா: கோவில்பட்டி கடலைமிட்டாய்

ஊர்ப்பெயரை உச்சரித்ததும் வாசனையைக் கமகமக்கச் செய்யும் சக்தி சில ஊர்களுக்கு உண்டு! அதில் கோவில்பட்டியும் ஒன்று. ஊரில் கால் வைத்ததும் எத்திசையும் பரவி இருக்கும் கடலைமிட்டாயின் வாசம், சாப்பிடச் சொல்லி நம் நாவைச் சுண்டி இழுக்கும்.

மிட்டாய் பிடிக்காத மனிதர்களே இருக்க முடியாது. அதுவும் அந்த மிட்டாய் இயற்கைப் பொருள்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டு, ஆரோக்கியத்தை மட்டுமே கொடுக்கும் என்றால், அந்த மிட்டாய்க்குப் பல்வேறு ரசிகர்கள் இருப்பார்கள்தானே! அப்படித்தான் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.
ஒரு கடி கடித்ததும் நா முழுவதும் பாகாய்ப் பரவும் இன்சுவை! வறு கடலையோடு இனிப்பு வெல்லத்தின் சேர்மானம் தனித்த சுவைக்குக் காரணமாகிறது. சேர்க்கப்படும் ஏலத்தின் மணம், வாய் முழுவதும் கமகமக்கச் செய்கிறது! செரிமானத்துக்குத் தொந்தரவு செய்யாமல் நல்லூட்டங்களை மட்டுமே பரிசளிக்கும் கோவில்பட்டி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow