கோவையில் அதிகரித்து வரும் ‘பிக்கிள் பால்’ விளையாட்டு மைதானங்கள்!

மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக உள்ள ‘பிக்கிள் பால்’ விளையாட்டு இப்போது கோவையில் அறிமுகமாகி 40-க்கும் மேற்பட்ட மைதானங்களில் விளையாடப்பட்டு வருகிறது.

Apr 21, 2025 - 17:25
 0  5
கோவையில் அதிகரித்து வரும் ‘பிக்கிள் பால்’ விளையாட்டு மைதானங்கள்!

கோவை: மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக உள்ள ‘பிக்கிள் பால்’ விளையாட்டு இப்போது கோவையில் அறிமுகமாகி 40-க்கும் மேற்பட்ட மைதானங்களில் விளையாடப்பட்டு வருகிறது. டென்னிஸ் மற்றும் பாட்மிண்டன் விளையாட்டுகளின் கலவையான ‘பிக்கிள் பால்’ விளையாட்டு, அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியாவிலும் பரவலாக விளையாடப்பட்டு வருகிறது. சுமார் 16 மாநிலங்களில் ‘பிக்கிள் பால்’ விளையாடப்பட்டு வருகிறது.

அனைத்து வயதினரையும் ஈர்க்கும் ‘பிக்கிள் பால்’ விளையாட்டு டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு தொடங்கி இப்போது கோவை உள்ளிட்ட 2-ம் நிலை நகரங்களுக்கு பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவில் 3000-க்கும் மேலான பதிவு செய்யப்பட்ட ‘பிக்கிள் பால்’ விளையாட்டு வீரர்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் இவ்விளையாட்டுக்காக 1,000-க்கும் மேற்பட்ட மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கோவையில் 40-க்கும் மேற்பட்ட ‘பிக்கிள் பால்’ விளையாட்டு மைதானங்கள் உருவாகி உள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow