விருதுநகரில் 8 ஆண்டுகளாக மயில்களுக்கு உணவு அளிக்கும் வியாபாரி!

விருதுநகரில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக மயில்களுக்கு வியாபாரி ஒருவர் உணவளித்து வருகிறார். விருதுநகர் யானைக்குழாய் தெருவைச் சேர்ந்தவர் போத்திராஜ் (55).

Oct 13, 2025 - 13:50
 0  3
விருதுநகரில் 8 ஆண்டுகளாக மயில்களுக்கு உணவு அளிக்கும் வியாபாரி!

விருதுநகர்: விருதுநகரில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக மயில்களுக்கு வியாபாரி ஒருவர் உணவளித்து வருகிறார். விருதுநகர் யானைக்குழாய் தெருவைச் சேர்ந்தவர் போத்திராஜ் (55). விருதுநகர் மார்க்கெட்டில் கறிவேப்பிலை, கொத்தமல்லி வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து மயில்களுக்கு உணவளித்து வருகிறார்.

இதுகுறித்து போத்திராஜ் கூறியதாவது: மார்க்கெட் கடையில் ஓரளவு நல்ல வருமானம் வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக வீட்டின் மாடியில் பறவைகளுக்கு உணவளித்து வருகிறேன். தினமும் காலையிலும், மாலையிலும் அரிசி, சாதம் மற்றும் மிச்சர் போன்றவை வைப்பேன். இரு வேளையும் தண்ணீர் வைப்பேன். 100-க்கும் மேற்பட்ட காக்கைகள், புறாக்கள், மைனாக்கள் போன்ற பறவைகள் வந்து சாப்பிட்டுச் செல்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow