திண்டிவனம் அருகே 1,300 ஆண்டு பழமையான பல்லவர் கால ஐயனார் சிற்பம் கண்டெடுப்பு!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த அன்னம்புத்தூர் கிராமத்தில் பல்லவர் கால ஐயனார் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.

Jul 29, 2025 - 23:25
 0  3
திண்டிவனம் அருகே 1,300 ஆண்டு பழமையான பல்லவர் கால ஐயனார் சிற்பம் கண்டெடுப்பு!

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த அன்னம்புத்தூர் கிராமத்தில் பல்லவர் கால ஐயனார் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது: “அன்னம்புத்தூர் ஏரிக்குள் சன்னியாசி மேடு பகுதி மீது உள்ள கருங்கல்லில் தனிச் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இதனை சன்னியாசி சாமி என கிராம மக்கள் வணங்குகின்றனர். இந்த சிற்பத்துக்கு உரியவர் ஐயனார். பிரம்மாண்டமான தலை அலங்காரத்துடன், இடைக்கச்சை அணிந்து காணப்படும் ஐயனாரின் இடுப்பில் குறுவாள் இருக்கிறது. காதுகள், மார்பு, கைகள் மற்றும் கால்களில் அணிகலன்கள் காணப்படுகின்றன. வலது கையை முழங்கால் மீது வைத்தும், இடது கையை தொடை மீது வைத்தும் வலது காலை குத்திட்டும், இடது காலை மடக்கியும் மகாராஜ லீலாசனத்தில் அமர்ந்து காட்சி அளிக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow