எல்ப்ரஸ் சிகரத்தில் ஏறி புதுச்சேரி வீராங்கனை திவ்யா சாதனை!
புதுச்சேரியைச் சேர்ந்த மலையேற்ற வீராங்கனை திவ்யா, ஐரோப்பா கண்டத்தின் மிக உயர்ந்த மலையான எல்ப்ரஸ் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த மலையேற்ற வீராங்கனை திவ்யா, ஐரோப்பா கண்டத்தின் மிக உயர்ந்த மலையான எல்ப்ரஸ் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி கூனிச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா (29). மலையேற்ற வீராங்கனையான இவர், மத்திய பாதுகாப்பு அமைச்சகரத்தின் கீழ் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் டிராங்கில் உள்ள தேசிய மலையேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விளையாட்டு நிறுவனத்தில் (NIMAS) மலையேறுதல் மற்றும் பனிப்பாறை பயிற்சியை முடித்தார். மேலும், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கார்டியன் கிரிபெர்மி மலையேறுதல் நிறுவனத்தில் (GGIM) அடிப்படை மற்றும் மேம்பட்ட பாறை ஏறுதல் பயிற்சியைப் பெற்றார்.
What's Your Reaction?