9 ஆண்டுகளில் 228 குழந்தைகளுக்கு ‘காக்ளியர் இம்ப்ளான்ட்’ சிகிச்சை - மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாதனை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 9 ஆண்டுகளில் 228 குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 228 ஏழை குழந்தைகளின் காது கேளாமை பிறவி குறைபாட்டை சீர்படுத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்

Jun 3, 2025 - 21:50
 0  8
9 ஆண்டுகளில் 228 குழந்தைகளுக்கு ‘காக்ளியர் இம்ப்ளான்ட்’ சிகிச்சை - மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாதனை

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 9 ஆண்டுகளில் 228 குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை செலவாகும் இச்சிகிச்சையை இலவசமாக மேற்கொள்ளவைத்து, இதுவரை 228 ஏழை குழந்தைகளின் காது கேளாமை பிறவி குறைபாட்டை சீர்படுத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனைத்து சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவுகளும் செய்பட்டுவரும் நிலையில், காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர்கள், அறுவை சிகிச்சைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் 60 ஆயிரம் வெளிநோயாளிகள், சுமார் 1.500 உள்நோயாளிகளுக்கு இந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow