ஏலகிரி மலைச்சரிவில் 5,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியத் தொகுதி கண்டெடுப்பு

வாணியம்பாடி - ஆலங்காயம் செல்லும் வழியில் ஏலகிரி மலைச்சரிவில் இரும்புக்காலப் பண்பாட்டைச் சேர்ந்த மக்களின் ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய பாறை ஓவியத்தொகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

Jun 24, 2025 - 18:55
 0  3
ஏலகிரி மலைச்சரிவில் 5,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியத் தொகுதி கண்டெடுப்பு

ஏலகிரி: வாணியம்பாடி - ஆலங்காயம் செல்லும் வழியில் ஏலகிரி மலைச்சரிவில் இரும்புக்காலப் பண்பாட்டைச் சேர்ந்த மக்களின் ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய பாறை ஓவியத் தொகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியரும், தொல்லியல் வரலாற்றியல் ஆய்வாளருமான முனைவர் ஆ.பிரபு மற்றும் திருப்பத்தூர் மாவட்டத் தொன்மைப் பாதுகாப்பு மையத்தின் தலைவர் வே.ராதாகிருஷ்ணன், செயலாளர் முத்தமிழ்வேந்தன் ஆகியோர் ஏலகிரி மலைச்சரிவில் மேற்கண்ட கள ஆய்வில் இரும்புக்கால மக்களின் பாறை ஓவியம் கண்டெடுத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow