இந்திய காலனி வரலாற்றை எழுதிய வந்தவாசி போர் - 264 ஆண்டு சரித்திர கோட்டை!

இத்தகைய சூழலில், இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர்கள் தங்களது வணிக ஆதிக்கத்தை மேம்படுத்த கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். 1751-ல் ராபர்ட் கிளைவ், ஆற்காட்டை  கைப்பற்றினார்.

Jan 23, 2025 - 18:00
 0  5
இந்திய காலனி வரலாற்றை எழுதிய வந்தவாசி போர் - 264 ஆண்டு சரித்திர கோட்டை!

வேலூர்: இந்திய காலனி வரலாற்றை எழுதிய நாள் 1760 ஜன.22 என்பது யாராலும் மறுக்க முடியாது. 265 ஆண்டுகளுக்கு முன்பு இதே தேதியில் தமிழ்நாட்டின் தற்போதைய திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஆங்கிலேய படைகளுக்கும், பிரெஞ்சு படைகளுக்கும் இடையே நடந்த வந்தவாசி போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதால், அடுத்த 187 ஆண்டுகள் நாம் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டே கிடக்க வேண்டிய அவல நிலைக்கு வழிவகுத்த நாள் இந்த நாள்தான். இந்த போரில் பிரெஞ்சு படைகள் வென்றிருந்தால் இந்திய வரலாறு வேறுவிதமாக எழுதப்பட்டிருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.

வாஸ்கோடகாமா: உலக வரலாற்றை உற்று நோக்கினால், ஒரு உண்மை விளங்கும். 1453-ம் ஆண்டு, மே மாதம் 29-ம் நாள் ஆட்டோமானிய பேரரசின் துருக்கியர்கள், ரோமானிய பேரரசுக்கு சொந்தமான தங்க ஆப்பிள் என்றழைக்கப்பட்ட இன்றைய இஸ்தான்புல் எனப்படும் கான்டாண்டி நோபிள் நகரை கைப்பற்றியதால் ஐரோப்பியர்களின், ஆசியாவுக்கான வணிக பாதை மூடப்பட்டது. வேறு வழியில்லை, புதிய வணிக பாதையை கண்டறிய வேண்டிய கட்டாயத்துக்கு ஐரோப்பியர்கள் தள்ளப்பட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow