280+ அரங்குகள் உடன் கோவை புத்தக திருவிழா ஜூலை 18-ல் தொடக்கம்

கோவை மாவட்ட நர்வாகம், பள்ளி கல்வித் துறை, கொடிசியா இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தக திருவிழா - 2025 ‘கொடிசியா’ கண்காட்சி வளாகத்தில் ஜூலை 18-ம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதி வரை நடக்கிறது.

Jun 3, 2025 - 21:50
 0  5
280+ அரங்குகள் உடன் கோவை புத்தக திருவிழா ஜூலை 18-ல் தொடக்கம்

கோவை: கோவை மாவட்ட நர்வாகம், பள்ளி கல்வித் துறை, கொடிசியா இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தக திருவிழா - 2025 ‘கொடிசியா’ கண்காட்சி வளாகத்தில் ஜூலை 18-ம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதி வரை நடக்கிறது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 3) மாலை நடந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர், கோயம்புத்தூர் புத்தக திருவிழா - 2025-க்கான இலச்சினையை வெளியிட்டார். கோயம்புத்தூர் புத்தக திருவிழா தலைவர் ராஜேஷ், துணைத் தலைவர் முத்துக்குமார், ‘கொடிசியா’ தலைவர் கார்த்திகேயன், கவுரவ செயலாளர் யுவராஜ், சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன், மாவட்ட நூலக அலுவலர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow