உணவு சுற்றுலா: மக்கன் பேடா

பழங்கால உணவு வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால், வெவ்வெறு பகுதிகளில் ஆட்சி செய்த ஆட்சியாளர்களைப் பொறுத்து உணவுக் கலச்சாரம் அவ்வப்பகுதிகளில் இரண்டறக் கலந்திருக்கும்.

Mar 26, 2025 - 19:20
 0  10
உணவு சுற்றுலா: மக்கன் பேடா

பழங்கால உணவு வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால், வெவ்வெறு பகுதிகளில் ஆட்சி செய்த ஆட்சியாளர்களைப் பொறுத்து உணவுக் கலச்சாரம் அவ்வப்பகுதிகளில் இரண்டறக் கலந்திருக்கும். அப்படி நவாப்களின் உணவுக் கலாச்சாரத்தில் இருந்த பல்வேறு தின்பண்டங்கள், இப்போதும் நம்மிடையே புழக்கத்தில் இருக்கின்றன. அதில் இனிப்புச் சுவையைப் பாகாய் நாவில் படரவிடும் மக்கன் பேடா என்கிற தின்பண்டம் நவாப்களின் வழி ஆற்காட்டுக்குள் புகுந்த ஒன்று.

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து ஆற்காட்டுக்குள் நுழைந்தால் பரபரப்பாக இயங்குகிறது நகரம். ‘மக்கன் பேடா எங்கு கிடைக்கும்?’ எனக் கேட்டால் பழமையான சில கடைகளுக்கு அறிமுகம் கொடுக்கின்றனர் அப்பகுதி மக்கள்! அதில் 194 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆற்காடு செட்டியார் மிட்டாய்க் கடைக்குள் நுழைந்தோம். அதன் வரலாறு மற்றும் தயாரிப்பு நுணுக்கங்களைப் பகிர்ந்துகொண்டார் கடை உரிமையாளர்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow