இரு நாடுகளிடையே போர் நிறுத்தம், அமைதி வேண்டி ரஷ்யா - உக்ரைன் தோழிகள் தமிழக கோயில்களில் வழிபாடு

ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டி, அந்த நாடுகளைச் சேர்ந்த தோழிகள் 2 பேர், தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

Nov 11, 2024 - 16:08
 0  4
இரு நாடுகளிடையே போர் நிறுத்தம், அமைதி வேண்டி ரஷ்யா - உக்ரைன் தோழிகள் தமிழக கோயில்களில் வழிபாடு

கும்பகோணம்: ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டி, அந்த நாடுகளைச் சேர்ந்த தோழிகள் 2 பேர், தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

ரஷ்யாவைச் சேர்ந்தவர் ஷெனியா(27), உக்ரைனைச் சேர்ந்தவர் இலியானா(29). இவர்கள் இருவரும், இரு நாடுகளிடையே போர் தொடங்குவதற்கு முன்பிருந்தே தோழிகளாக உள்ளனர். அண்மையில் இந்தியா வந்த இருவரும், இரு நாடுகளிடையே போர் நிறுத்தம், அமைதி வேண்டி தமிழக கோயில்களில் வழிபாடு நடத்த முடிவு செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow