கேரள மாநிலத்தில் உறவினர்கள் கைவிட்டதால் முதியோர் இல்லத்துக்கு சேமிப்பை வழங்கிய மூதாட்டி!
கேரளாவின் மராரிகுலாம் பஞ்சாயத்தை சேர்ந்தவர் பாரதியம்மா (90). திருமணம் ஆகாதவர்.

ஆலப்புழை: கேரளாவின் மராரிகுலாம் பஞ்சாயத்தை சேர்ந்தவர் பாரதியம்மா (90). திருமணம் ஆகாதவர். இளம் வயதில் சம்பாதித்த பணத்தை வங்கியில் சேமித்து வைத்திருந்தார். அந்த பணத்தை சட்டப்படி உரிமை கோர, இவரது உறவினர்கள் சிலரது பெயரை குறிப்பிட்டிருந்தார். முதுமையடைந்ததும், உறவினர்கள் யாரும் இவரை கவனித்துக்கொள்ள முன்வரவில்லை.
இதனால் கடந்த 2019ம் ஆண்டு செர்தலா பகுதியில் மயிதாரா என்ற இடத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்ந்தார். கடந்தாண்டு இவர் படுத்த படுக்கையாகிவிட்டார். இதனால் இவர் ஆராட்டுபுழாவில் உள்ள சந்த்வனதீரம் முதியோர் இல்லத்துக்கு மாற்றப்பட்டார்.
What's Your Reaction?