கோவையில் பெருகிய தெருநாய்கள் - நிம்மதி இழக்கும் மக்கள்!
கோவையில் அண்மையில் தெரு நாய் கடித்து ரேபீஸ் பாதித்த நிலையில் பயந்து போன வடமாநில தொழிலாளி அரசு மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை: கோவை மாநகர தெருக்களில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்திக் கடிப்பதும், நாய் குறுக்கே செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து படுகாயமடைந்து கை, கால் முறிவு ஏற்படுவதும், சில நேரங்களில் பலத்த தலைக்காயங்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
கோவையில் அண்மையில் தெரு நாய் கடித்து ரேபீஸ் பாதித்த நிலையில் பயந்து போன வடமாநில தொழிலாளி அரசு மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளில் கடந்த 2023-ல் நடத்திய கணக்கெடுப்பில் சுமார் 1.11 லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
What's Your Reaction?