உணவு சுற்றுலா: தூத்துக்குடி மக்ரூன்

துறைமுகம், கடல் உணவுகள், சுவைமிக்க தின்பண்டங்கள் எனக் கலாச்சாரரீதியாகத் தனித்துவமிக்க மாவட்டம், தூத்துக்குடி.

Jul 16, 2025 - 15:10
 0  18
 உணவு சுற்றுலா: தூத்துக்குடி மக்ரூன்

துறைமுகம், கடல் உணவுகள், சுவைமிக்க தின்பண்டங்கள் எனக் கலாச்சாரரீதியாகத் தனித்துவமிக்க மாவட்டம், தூத்துக்குடி. பொருளாதாரரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரம் தூத்துக்குடி. மீன் உணவு வகைகளுக்குப் பெயர் போன தூத்துக்குடியில் மற்றொரு சிறப்புத் தின்பண்டம் ‘மக்ரூன்.’

முட்டையின் வெண்கருவை மையமாக வைத்து, முந்திரியின் ஆதரவோடு தயாரிக்கப்படும் இனிப்புதான் மக்ரூன்.
வரலாற்றுரீதியாகப் பார்த்தால், கடலோரமாக இருக்கும் நகரங்களில் அந்நியப் படையெடுப்புகளின் காரணமாக, கலாச்சாரரீதியிலும் உணவியல் சார்பிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அவ்வகையில் தூத்துக்குடியில் ஆட்சிபுரிந்த போர்ச்சுகீசியர்கள் கொடுத்த பரிசுதான் இந்த மக்ரூன்! தூத்துக்குடியில் அறிமுகப்படுத்தப்பட்டதால் ‘தூத்துக்குடி மக்ரூன்’ எனப் பெயர் பெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow