நாடு கடத்தப்பட்ட சடலம் - இவா பெரோன் | கல்லறைக் கதைகள் 7
இவா பெரோன், தொழிலாளர்களின் நலன்களுக்காக உழைத்தவர். பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். ஏழைகளுக்காக அறக்கட்டளையை உருவாக்கித் தன் இறுதி மூச்சு வரை பாடுபட்டவர்.

இவா பெரோன் அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற நடிகை. அந்நாட்டின் அதிபராக இருந்த ஜுவான் டொமிங்கோ பெரோனை மணந்தார். இவர் தொழிலாளர்களின் நலன்களுக்காக உழைத்தவர். பெண்கள் உரிமைகளுக்காகப் போராடியவர். பெண்கள் அரசியல் கட்சியைத் தோற்றுவித்தவர். ஏழைகளுக்காக அறக்கட்டளையை உருவாக்கித் தன் இறுதி மூச்சு வரை பாடுபட்டவர். அர்ஜென்டினாவின் ஆன்மிகத் தலைவர் என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டவர்!
அர்ஜென்டினாவில் உள்ள லோஸ் டோல்டோஸ் என்கிற சிறிய கிராமத்தில் 1919ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பிறந்தார் மரியா இவா துவார்டே. ஓரளவு வசதியான குடும்பம். இவாவின் அம்மா, அவரது அப்பாவுக்கு இரண்டாவது மனைவி. அவருக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில் இவா நான்காவது குழந்தை. இவாவின் ஆறு வயதில் அப்பா இறந்து போனார். சட்டப்பூர்வ மனைவி இல்லை என்பதால், இவாவின் அம்மாவுக்குச் சொத்தில் எந்தப் பங்கும் கிடைக்கவில்லை. இறுதிச் சடங்கில் பங்கேற்கக்கூட அனுமதிக்கவில்லை. அதனால், குடும்பம் லாஸ் பம்பஸுக்குக் குடிபெயர்ந்தது. அது ஏழைகள் மிகுந்த கிராமம். எங்கும் அழுக்கும் தூசியும் நிறைந்திருந்தன.
What's Your Reaction?