சர்க்கஸ் கலையை வாழ வைக்க சலுகைகளை அறிவிக்குமா தமிழக அரசு?
இப்படி உயிரை பணயம் வைத்து சாகசம் புரியும் சர்க்கஸ் கலைஞர்களின் வாழ்வாதாரம் என்பது எதிர்கால தலைமுறையினரையும், ரசிகர்களையும் வைத்து தான் உள்ளது.

கோவை: அந்தரத்தில் தொங்கி ஊஞ்சல் ஆடுதல், உடம்பை வில்லை போன்று வளைக்கும் ஜிம்னாஸ்டிக்ஸ், மரணக்கிணற்றில் பைக்கை ஓட்டுதல், நகைச்சுவை தரும் கோமாளிகள் உள்ளிட்ட பல்வேறு வியத்தகு நிகழ்ச்சிகளை நடத்தி கரணம் தப்பினால் மரணம் என சர்க்கஸ் கலைஞர்கள் காட்டும் அதிரடி சாகசங்களை சிறு குழந்தை முதல் பெரியவர் வரை கைதட்டி ரசிக்காமல் இருந்துவிட முடியாது.
இப்படி உயிரை பணயம் வைத்து சாகசம் புரியும் சர்க்கஸ் கலைஞர்களின் வாழ்வாதாரம் என்பது எதிர்கால தலைமுறையினரையும், ரசிகர்களையும் வைத்து தான் உள்ளது. தொழில் நகரான கோவையில் பொழுதுபோக்கு அம்சங்கள் என்பது குறைவாகவே உள்ளன. அவ்வப்போது வ.உ.சி. பூங்காவில் நடைபெறும் சர்க்கஸ் சாகச நிகழ்ச்சிகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வந்து பார்த்து வருகின்றனர்.
What's Your Reaction?