கலீலியோ கலிலி | விஞ்ஞானிகள் - 1
ஒரு முறை தேவாலயத்துக்குச் சென்றபோது, அங்கு மேலே தொங்கிய விளக்கு காற்று அதிகமானால் வேகமாக ஆடியது. காற்று குறைந்தால் மெதுவாக ஆடியது. வேகமாக ஆடும்போது எவ்வளவு நேரமாகிறது என்பதைக் கணக்கிட்டார் கலிலியோ.

ஆர்வமும் உழைப்பும் இருந்தால் விஞ்ஞானி ஆகலாம். கலீலியோ கலிலி மருத்துவம் படிக்கச் சேர்ந்தார். ஆனால், கணிதத்தைப் படித்தார். பின்னர் உலகம் போற்றும் விஞ்ஞானியாக உருவானார். இத்தாலியில் பிறந்தார் கலீலியோ. பத்து வயதுவரை பைசா நகரத்தில் வளர்ந்தார். வீட்டிலிருந்தே படித்தார். ஃபிளாரன்ஸ் நகரத்திற்குக் குடிபெயர்ந்ததும் பள்ளியில் சேர்த்தனர். அங்கு மத போதகராகலாம் என நினைத்தார். ஆனால், மகனை மருத்துவராக்கும் கனவோடு மீண்டும் பைசாவிலுள்ள பல்கலைக்கழகத்தில் சேர்த்தார் கலீலியோவின் அப்பா.
கல்லூரியில் எந்தத் துறையைப் படித்தாலும் அரிஸ்டாட்டிலைப் படிக்க வேண்டும். கலீலியோ விரும்பிப் படித்தார். ஆனால் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் கேள்விகளை எழுப்பினார். ஆனால் பதில் கிடைக்கவில்லை. தந்தையின் விருப்பம் என்பதால் மருத்துவப் படிப்பைக் கைவிட முடியவில்லை. பாடங்களில் தோல்வியடைந்தார். ரிச்சி என்கிற கணித மேதையின் வகுப்பை மறைந்திருந்து கேட்டார் கலீலியோ. மருத்துவ மாணவர் தன் வகுப்பைக் கவனிக்கிறாரே என வகுப்பிற்குள் அனுமதித்தார். கணிதத்தில் தேர்ச்சிகொள்ள வைத்தார். கணித ஆய்வு கட்டுரையை வெளியிட்டார் கலீலியோ. தன் கல்லூரியிலேயே கணித பேராசிரியரானார். மீண்டும் அரிஸ்டாட்டிலின் கருத்துகளை எதிர்த்ததால் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
What's Your Reaction?