காந்திக்கு கோயில் கட்டி சிலை வைத்து வழிபடும் கம்பம் கிராமம்!

கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கிராமத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு கோயில் கட்டி 39 ஆண்டுகளாக வழிபாடு செய்து வருகிறார்கள். 

Nov 11, 2024 - 16:08
 0  5
காந்திக்கு கோயில் கட்டி சிலை வைத்து வழிபடும் கம்பம் கிராமம்!

தேனி: கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கிராமத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு கோயில் கட்டி 39 ஆண்டுகளாக வழிபாடு செய்து வருகிறார்கள்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது காமயகவுண்டன்பட்டி. இக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். இந்தியா முழுமைக்கும் சுதந்திர வேட்கை தீவிரமடைந்திருந்த நிலையில், இக்கிராமத்தைச் சேர்ந்த பரமசிவத்தேவர், சக்தி வடிவேல் கவுடர், பாண்டியராஜ், கிருஷ்ணசாமி கவுடர், சாமாண்டி ஆசாரி, குந்திலி ராமசாமி நாயக்கர் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட தியாகிகள் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு இந்த கிராமத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர். சுதந்திரப் போராட்டத்தின் நினைவாகவும், தியாகிகளை பெருமைப்படுத்தவும் இந்த கிராமத்தில் மகாத்மா காந்திக்கு கோயில் கட்டி, அவரது உருவச் சிலையை நிறுவ கிராம மக்கள் முடிவு செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow