விமானத்தில் விடாமல் அழுத குழந்தை - தாலாட்டு பாடி தூங்க வைத்த அமைச்சர் கீதாஜீவன்!
விமானத்தில் விடாமல் அழுது கொண்டிருந்த குழந்தையை சமூக நலத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தாலாட்டுப் பாடி தூங்க வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி: விமானத்தில் விடாமல் அழுது கொண்டிருந்த குழந்தையை சமூக நலத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தாலாட்டுப் பாடி தூங்க வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு சென்னைக்குப் புறப்பட்டுச் சென்ற இண்டிகோ விமானத்தில் ஓர் இளம் தம்பதி தங்களது கைக் குழந்தையுடன் பயணம் செய்தனர். இரண்டு வயது மதிக்கத்தக்க அந்தக் குழந்தை விமானம் புறப்படும் வரை அமைதியாக இருந்தது. ஆனால், ஓடுதளத்தில் ஓடி விமானம் மேலெழும்பத் தொடங்கியதும் குழந்தை அழத் தொடங்கியுள்ளது.
What's Your Reaction?