வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் குடுவை, முத்திரை, சங்கு வளையல்கள் கண்டெடுப்பு
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வில் சுடுமண் குடுவை, சுடுமண் முத்திரை மற்றும் சங்குவளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வில் சுடுமண் குடுவை, சுடுமண் முத்திரை மற்றும் சங்குவளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளில் உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, வட்ட சில்லு, தங்க மணி, சூது பவள மணி உட்பட 3,210 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
What's Your Reaction?