உணவு சுற்றுலா: இதமான லோனாவாலா… தித்திக்கும் ஃபுட்ஜ்
லோனாவாலா… தென்னிந்தியப் பயணப் பிரியர்கள் பயணம் செய்ய ஆர்வமாகத் திட்டமிடும் பகுதி இது!

லோனாவாலா… தென்னிந்தியப் பயணப் பிரியர்கள் பயணம் செய்ய ஆர்வமாகத் திட்டமிடும் பகுதி இது! மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பைக்கும் பூனேவுக்கும் இடையில் இருக்கும் எழில் சூழ்ந்த பகுதி. வெண்மேகமூட்டம்… வெள்ளியைச் சலித்துப் பொழியும் அருவிகள்... இதமான குளிர்… பசுமை போர்த்திய மலைகள்… தெள்ளெனத் தெரியும் நீரோட்டம் என மனதிற்கு இன்பத்தை மட்டுமே அள்ளிக் கொடுக்கும் இடம் லோனாவாலா!
சிக்கியும் ஃபுட்ஜும்: லோனாவாலாவின் அழகிய சூழலைத் தாண்டி அங்கு புகழ்பெற்ற இனிப்பு ரகங்கள் சிக்கி, ஃபுட்ஜ்! லோனாவாலாவில் திரும்பிய திசை எங்கிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சிக்கி, ஃபுட்ஜ் விற்பனை செய்யும் கடைகள்தாம்! அந்தக் கடைகளுக்குள் நுழைந்தால் சிக்கி, ஃபுட்ஜ் பற்றி விவரிக்கின்றனர். சிக்கி நம் கடலை மிட்டாயின் ஒன்றுவிட்ட தம்பி. ஃபுட்ஜ் சாக்லேட்டின் தூரத்து உறவினர்.
What's Your Reaction?