யுனெஸ்கோவின் பாரம்பரிய நகரங்கள் பட்டியலில் புதுச்சேரியை சேர்க்க நடவடிக்கை!
யுனெஸ்கோவின் பாரம்பரிய நகரங்கள் பட்டியலில் புதுச்சேரியை சேர்க்கும் வகையில் இதுவரை 245 கட்டிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் மரபைக் கொண்ட பாரம்பரிய கட்டிடங்களும் இடம் பெற்றுள்ளன.

யுனெஸ்கோவின் பாரம்பரிய நகரங்கள் பட்டியலில் புதுச்சேரியை சேர்க்கும் வகையில் இதுவரை 245 கட்டிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் மரபைக் கொண்ட பாரம்பரிய கட்டிடங்களும் இடம் பெற்றுள்ளன. புதுச்சேரியில் இன்டாக், நகர அமைப்பு குழுமங்கள் இணைந்து நடத்திய கணக்கெடுப்பில், 114 பாரம்பரிய கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டு, கடந்த 2022-ம் ஆண்டுஅதற்கான பட்டியல் அறிவிக்கப்பட்டது. யுனெஸ்கோவின் பாரம்பரிய நகரங்கள் பட்டியலில் புதுச்சேரியை சேர்க்கும் வகையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் விடுபட்ட மேலும் 131 பாரம்பரிய கட்டிடங்களை இரண்டாம் கட்ட பட்டியலில் சேர்த்து கடந்த ஆகஸ்ட் மாதம் மற்றொரு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் பழமையான கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள், தனியார்கள் கட்டிடங்களும் இடம் பெற்றன. இந்த இரண்டு பட்டியல்களிலும் சேர்த்து இதுவரை 245 பாரம்பரிய கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
What's Your Reaction?