2025-26-க்கான வீரர்கள் தேர்வை சென்னையில் நடத்துகிறது இந்திய விளையாட்டு ஆணையம்

2025-26-ம் ஆண்டுக்கான வீரர்கள் தேர்வை இந்திய விளையாட்டு ஆணையம் சென்னையில் நடத்துகிறது.

Jan 22, 2025 - 18:40
 0  5
2025-26-க்கான வீரர்கள் தேர்வை சென்னையில் நடத்துகிறது இந்திய விளையாட்டு ஆணையம்

சென்னை: 2025-26-ம் ஆண்டுக்கான வீரர்கள் தேர்வை இந்திய விளையாட்டு ஆணையம் சென்னையில் நடத்துகிறது. இது தொடர்பாக மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சென்னை மையம், 2025-2026 ஆம் ஆண்டுக்கு கீழ்க்கண்ட விளையாட்டுக்களில் திறமையான விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வுப் போட்டிகளை நடத்தவுள்ளது.

12 முதல் 18 வயது பிரிவில் தடகள வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு 01.02.2025 அன்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. 2010-ம் ஆண்டுக்கும் 2013-ம் ஆண்டுக்கும் இடையில் பிறந்தவர்களுக்கான ஆடவர் கால்பந்து பிரிவு தேர்வு 04.02.2025, 05.02.2025 ஆகிய தேதிகளில் நேரு பூங்காவிலுள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் மைதானத்தில் நடைபெறுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow