சவுதியில் ஒட்டகம் மேய்த்தவர் நாடு திரும்பினார்: தெலங்கானா தொழிலாளியின் உருக்கமான கதை

சவுதி அரேபியாவில் ஹவுஸ் கீப்பிங் பணி என சொல்லி அழைத்து செல்லப்பட்ட தெலங்கானாவை சேர்ந்த நாம்தேவ் ரத்தோத் என்ற புலம்பெயர் தொழிலாளி, அங்கு பாலைவனத்தில் கடுமையான வெப்ப மத்தியில் ஒட்டகம் மேய்த்து வந்துள்ளார்.

Nov 11, 2024 - 16:08
 0  4
சவுதியில் ஒட்டகம் மேய்த்தவர் நாடு திரும்பினார்: தெலங்கானா தொழிலாளியின் உருக்கமான கதை

ஹைதராபாத்: சவுதி அரேபியாவில் ஹவுஸ் கீப்பிங் பணி என சொல்லி அழைத்து செல்லப்பட்ட தெலங்கானாவை சேர்ந்த நாம்தேவ் ரத்தோத் என்ற புலம்பெயர் தொழிலாளி, அங்கு பாலைவனத்தில் கடுமையான வெப்ப மத்தியில் ஒட்டகம் மேய்த்து வந்துள்ளார். இந்திய தூதரகம், தெலங்கானா அரசு, உள்ளூர் சமூக ஆர்வலர்களின் துணையோடு அவர் மீட்கப்பட்டு, தற்போது நாடு திரும்பியுள்ளார்.

51 வயதான நாம்தேவ் ரத்தோத், கடந்த ஆகஸ்ட் மாதம் சவுதியில் தனது நிலை குறித்து தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம் ருவ்வி கிராமத்தில் உள்ள மனைவி லட்சுமிக்கு செல்ஃபி வீடியோ அனுப்பி இருந்தார். அதில் பாலைவனத்தில், மிகவும் கடுமையான வெப்ப சூழலுக்கு மத்தியில் தான் எதிர்கொண்டு வரும் சொல்ல முடியாத துயரினை பகிர்ந்திருந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow