உணவு சுற்றுலா: கேரளத்து சட்டிச் சோறு
பொதுவுடைமைச் சமூகத்தில் உணவுப் பகிர்தல் தொடங்கிய போது, பகிரப்பட்ட உணவு வகைகளை வைத்துச் சாப்பிட மரத்தின் அகன்ற இலைகள் கலமாகப் பயன்பட்டிருக்கும்.

பொதுவுடைமைச் சமூகத்தில் உணவுப் பகிர்தல் தொடங்கிய போது, பகிரப்பட்ட உணவு வகைகளை வைத்துச் சாப்பிட மரத்தின் அகன்ற இலைகள் கலமாகப் பயன்பட்டிருக்கும். இதன் நீட்சியாக வாழை இலை, பாக்கு மட்டை, தாமரை இலை என வெவ்வேறு இலைகளை நாம் பயன்படுத்தி வருகிறோம்.
பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப வெவ்வேறு கலங்கள் உணவைச் சாப்பிடுவதற்கு ஆதாரமாகப் பயன்பட்டிருக்கின்றன. சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை நெகிழித் தட்டுகளைக்கூட முயற்சி செய்து, அவை கொடுத்த பாதிப்புகளின் காரணமாக அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டோம். ஸ்டைன்லெஸ் ஸ்டீல் தட்டுகளைப் பயன்படுத்தும் வழக்கம் பெரும்பாலான வீடுகளில் இப்போது இருக்கிறது. இவை ஒருபுறம் இருக்க, நாம் மறந்த உணவுக் கலங்களில் மிக முக்கியமானது மண்ணால் செய்யப்பட்ட கலங்கள்! மண்பானை செய்யும் தொழில் உயிர்ப் பெற்ற காலக்கட்டத்தில், மண் பாத்திரங்கள் பெருமளவில் உணவு சமூகத்தில் புழக்கத்தில் இருந்திருக்கும்! இன்றும்கூட கிராமங்களில் மண்ணாலான கலங்களில் உணவு வகைகளைச் சமைப்பதையும், சாப்பிடுவதையும் பார்க்க முடிகிறது. மண் பானைகளில் சமைத்துச் சாப்பிடும் ஆசையும், மண்பானை உணவகங்களைத் தேடும் மனநிலையும் இப்போது பெரும்பாலானோருக்கு அதிகரித்து இருக்கிறதுதானே!
What's Your Reaction?