வாணியம்பாடி அருகே 15ம் நூற்றாண்டு சதிகல் கண்டெடுப்பு

ஆந்திர எல்லையை சுற்றியுள்ள இடத்தில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர் ஆ.பிரபு தலைமையில், திருப்பத்தூர் மாவட்ட தொன்மை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், முத்தமிழ் வேந்தன், சந்திரசேகரன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்

Jun 3, 2025 - 21:50
 0  6
வாணியம்பாடி அருகே 15ம் நூற்றாண்டு சதிகல் கண்டெடுப்பு

வாணியம்பாடி அருகே 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி மேற்கு பகுதியில் 8 கி.மீ தொலைவில் ஆந்திர எல்லையை சுற்றியுள்ள இடத்தில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர் ஆ.பிரபு தலைமையில், திருப்பத்தூர் மாவட்ட தொன்மை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், முத்தமிழ் வேந்தன், சந்திரசேகரன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, திகுவாபாளையம் என்னும் சிற்றூரின் எல்லையில் 2 சதிகல்லை ஆய்வுக் குழுவினர் கண்டறிந்தனர். இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் கல்லூரி பேராசிரியர் ஆ.பிரபு கூறும்போது, “வாணியம்பாடி வட்டம் திகுவாபாளையத்தைச் சேர்ந்த கோவேந்தன் என்பவர் அளித்த தகவலின் பேரில் நாங்கள் அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டோம். அப்போது திகுவாபாளையம் குறவர் வட்டம் அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் 3 ½ அடி உயரமும், 2 ½ அடி அகலமும் கொண்ட இரண்டு பலகை கற்களில் அமைக்கப்பட்ட சதி கற்கள் இருப்பது கண்டறியப்பட்டன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow