30 நிமிடங்களில் 25,000 லிட்டர் மழை நீரை சேகரித்த பெங்களூரு வாசி! - நெட்டிசன்கள் பாராட்டு
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று மாலை பொழிந்த மழையில் வெறும் 30 நிமிடங்களில் சுமார் 25,000 லிட்டர் மழை நீரை சேகரித்ததாக பெங்களூரு வாசியான சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று கனமழை பதிவானது. இந்நிலையில், நேற்று மாலை பொழிந்த மழையில் வெறும் 30 நிமிடங்களில் சுமார் 25,000 லிட்டர் மழை நீரை சேகரித்ததாக பெங்களூரு வாசியான சந்தோஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
அவரது வீடியோ பல நெட்டிசன்களை ஈர்த்துள்ளது. மேலும், அவரது முயற்சியை பலரும் பாராட்டி உள்ளனர். தனது எக்ஸ் சமூக வலைதள பயோவில் முன்னாள் இந்திய ராணுவ வீரர் என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?