கூவாகம் சித்திரைத் தேரோட்டம்: அரவான் களப்பலியால் திருநங்கையர் சோகம்

உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தில் உலக பிரசித்திப் பெற்ற கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று (மே 14) வெகு விமரிசையாக நடைபெற்றது. அரவான் களப்பலி கொடுக்கப்பட்டதும், தாலியை அறுத்து விதவை கோலத்தில் திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுதனர்.

May 14, 2025 - 16:50
 0  3
கூவாகம் சித்திரைத் தேரோட்டம்: அரவான் களப்பலியால் திருநங்கையர் சோகம்

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தில் உலக பிரசித்திப் பெற்ற கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று (மே 14) வெகு விமரிசையாக நடைபெற்றது. அரவான் களப்பலி கொடுக்கப்பட்டதும், தாலியை அறுத்து விதவை கோலத்தில் திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுதனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா, கொடியேற்றம் மற்றும் சாகை வார்த்தலுடன் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கியது. சுவாமி உற்சவம் தினசரி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக அரவான் சுவாமி திருக்கண் திறத்தல் மற்றும் திருநங்கைகள், பக்தர்கள் ஆகியோர் மாங்கல்யம் ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு நேற்று (மே 13) நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow