போட்டித் தேர்வை நினைத்து கலக்கமா? | மனதின் ஓசை 19
பொதுவாகத் தேர்வு, தேர்வு முடிவுகள் குறித்த பயம் பள்ளி மாணவர்களுக்கு இருப்பது வழக்கம். பள்ளிப் படிப்புக்குப் பிறகு கல்லூரித் தேர்வுகளைப் பெரும்பாலானோர் எளிதாகக் கடந்துவிடுகிறார்கள்.

பொதுவாகத் தேர்வு, தேர்வு முடிவுகள் குறித்த பயம் பள்ளி மாணவர்களுக்கு இருப்பது வழக்கம். பள்ளிப் படிப்புக்குப் பிறகு கல்லூரித் தேர்வுகளைப் பெரும்பாலானோர் எளிதாகக் கடந்துவிடுகிறார்கள். ஆனால், போட்டித் தேர்வு, ஒரு படிப்பில் சேர்வதற்கான சிறப்புத் தேர்வு எனும்போது அதற்குத் தயாராகத் தொடங்குவது முதல் தேர்வை எதிர்கொண்டு வெற்றி காண்பதுவரை அதிக சவால் நிறைந்த பயணமாகவே இருக்கிறது.
வெற்றிக்கான முதலீடு: போட்டித் தேர்வை எழுத விரும்பும் மாணவர் ஒருவர், அதற்காக அதிக நேரத்தை முதலில் முதலீடு செய்ய வேண்டி வரும். அதிக உழைப்பும் பயிற்சியும் அவசியம். சுயமாகத் தயாராக முடியாதபட்சத்தில், பயிற்சிக்காகப் பணத்தையும் செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இந்தக் காரணங்களாலும், அதிகப் போட்டி நிறைந்ததாக இருக்கும் என்பதாலும் பள்ளி, கல்லூரித் தேர்வுகளைவிட இது சற்று வேறுபட்டது என்பது அனைவரும் அறிந்ததே.
What's Your Reaction?