முனை மழுங்கிய வேலாக வந்து உருப்பெற்ற முருகன் திருத்தலம்

தேனி-போடி சாலையில் 7 கி.மீ. தொலைவில் தீர்த்தத் தொட்டி எனும் இடத்தில் விருப்பாட்சி ஆறுமுகநாயனார் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் முக்கிய அம்சமாக விளங்குவது முன்பகுதியில் உள்ள தீர்த்தத் தொட்டிதான். இப்பகுதியில் எவ்வளவு வறட்சி நிலவினாலும்,

Jan 2, 2025 - 16:30
 0  4
முனை மழுங்கிய வேலாக வந்து உருப்பெற்ற முருகன் திருத்தலம்

தேனி - போடி சாலையில் 7 கி.மீ. தொலைவில் தீர்த்தத் தொட்டி எனும் இடத்தில் விருப்பாட்சி ஆறுமுகநாயனார் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் முக்கிய அம்சமாக விளங்குவது முன்பகுதியில் உள்ள தீர்த்தத் தொட்டிதான். இப்பகுதியில் எவ்வளவு வறட்சி நிலவினாலும், இந்த சுனையில் மட்டும் நீர் வற்றாமல் வந்துகொண்டே இருக்கும். இது முருக தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது.

இதில் நீராடி முருகனிடம் வேண்டினால், நாகதோஷம், செவ்வாய் தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷங் கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால், இதன் சிறப்பை உணர்ந்த மக்கள் ‘தீர்த்தத் தொட்டி முருகன் கோயில்’ என்றே அழைக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow