‘ருசி’க்காக மிட் நைட்டிலும் பிரியாணியா? - உடல் நலத்தையும் கவனிங்க பாஸ்... மருத்துவர்கள் அட்வைஸ்!
‘பிரியாணி’.. இதுதான் இன்று பிரதான உணவாக அனைத்து வயதினரும் விரும்பும் உணவாக மாறிவிட்டது. சென்னையில் பிரியாணி அதிகளவில் நுகரப்படுவதை உணவு விநியோகிக்கும் ஆன்லைன் நிறுவனங்களே தெரிவித்துள்ளன.

சென்னை: ‘பிரியாணி’.. இதுதான் இன்று பிரதான உணவாக அனைத்து வயதினரும் விரும்பும் உணவாக மாறிவிட்டது. சென்னையில் பிரியாணி அதிகளவில் நுகரப்படுவதை உணவு விநியோகிக்கும் ஆன்லைன் நிறுவனங்களே தெரிவித்துள்ளன. இந்த அளவுக்கு பிரியாணி மக்களின் நாவில் நீங்கா இடம் பெற்றதற்கு, பிரியாணியில் சேர்க்கப்படும் மசாலா பொருட்களும், சுவையூட்டிகளுமே காரணம். ஒரு காலத்தில் பகல்பொழுதில் சாப்பாட்டுக்கு பதில் பிரியாணி சாப்பிட்ட காலம் மாறி, காலை, மதியம், மாலை, இரவு, நள்ளிரவு, அதிகாலை என எந்த நேரத்திலும் சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
அதிலும் குறிப்பாக இரவு 12 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை பிரியாணி கிடைக்கும் இடத்தை தேடி இளசுகள் அலை மோதுகின்றனர். குறிப்பாக ஐடி நிறுவனங்கள் உள்ள பகுதிகள், மேல் தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இரவு நேர பிரியாணி கடைகள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இரவில் பிரியாணி போன்ற உணவுகளை உட்கொள்வது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
What's Your Reaction?