இரவு விருந்துக்கு வராததால் உயிர் தப்பிய கர்னல் கில்லெஸ்பி - வேலூர் கோட்டை சிப்பாய் புரட்சியின் சுவாரசிய தகவல்
ஜூலை 9-ம் தேதி இரவு வேலூர் கோட்டையில் கர்னல் பேன்கோர்ட் அளித்த இரவு விருந்தில் கடைசி நேரத்தில் பங்கேற்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனார் என்ற சுவாரசிய தகவல் தெரியவந்துள்ளது

வேலூர் கோட்டையில் கடந்த 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி நடைபெற்ற சிப்பாய் புரட்சியை 7 மணி நேரத்துக்குள் கட்டுக்குள் கொண்டுவந்த சர் ராபர்ட் ரோலோ கில்லெஸ்பி, ஜூலை 9-ம் தேதி இரவு வேலூர் கோட்டையில் கர்னல் பேன்கோர்ட் அளித்த இரவு விருந்தில் கடைசி நேரத்தில் பங்கேற்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனார் என்ற சுவாரசிய தகவல் தெரியவந்துள்ளது.
கடந்த 1799-ல் நான்காம் மைசூர் போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்ட பிறகு அவரது குடும்பத்தினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள், அனைவரும் பலத்த பாதுகாப்புடன் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப் பட்டனர். வேலூர் கோட்டை பாதுகாப்பு பணியில் 4-வது படை பிரிவின் 2-வது இந்திய காலாட்படை வீரர்கள் இருந்தனர். 1806-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆங்கிலேய ராணுவத்தில் பணியாற்றிய இந்திய வீரர்களுக்கான புதிய சீருடை திருத்த விதிகள் அமல்படுத்தப்பட்டன. இதை ஏற்காத இந்து மற்றும் இஸ்லாமிய வீரர்கள், ஆங்கிலேயர்கள் தங்களை மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாக கருதினர்.
What's Your Reaction?