திண்டிவனம் - வன்னிப்பேர் கிராமத்தில் 1,000 ஆண்டு பழமையான சிற்பங்கள் கண்டெடுப்பு!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மரக்காணம் சாலையில் உள்ள வன்னிப்பேர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மூத்ததேவி - விஷ்ணு சிற்பம் மற்றும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மரக்காணம் சாலையில் உள்ள வன்னிப்பேர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மூத்ததேவி - விஷ்ணு சிற்பம் மற்றும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது: மூத்ததேவி வன்னிப்பெர் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு அருகாமையில் விளைநிலப் பகுதியில் மண்ணில் சாய்ந்த நிலையில் சுமார் இரண்டரை அடி உயரமுள்ள சிற்பம் காணப்படுகிறது. தலை அலங்காரம், காதணிகள், கழுத்தணிகளுடன் கால்களை அகட்டி மூத்ததேவி அமர்ந்து இருக்கிறாள். வலது கை அபய முத்திரையுடனும், இடது உள்ளங்கை எதையோ பற்றிய நிலையிலும் காணப்படுகின்றன.
What's Your Reaction?