“10-ம் நூற்றாண்டு குலோத்துங்க சோழன் கல்வெட்டில் எழுத்து சீர்திருத்தம் செய்த வரலாற்று தகவல் உள்ளது”

புதுச்சேரியில் ஒலிந்தியாபட்டு திருஅரசிலிஉடையார் கோயிலில் உள்ள பத்தாம் நூற்றாண்டு குலோத்துங்க சோழன் கல்வெட்டில் எழுத்து சீர்திருத்தம் செய்த வரலாற்றுத் தகவல் உள்ளது என புதுச்சேரி ஆசியவியல் ஆய்வகம் முன்னாள் பேராசிரியர் கோ.விசயவேணுகோபால் தெரிவித்தார்.

Jul 19, 2025 - 20:10
 0  6
“10-ம் நூற்றாண்டு குலோத்துங்க சோழன் கல்வெட்டில் எழுத்து சீர்திருத்தம் செய்த வரலாற்று தகவல் உள்ளது”

மதுரை: புதுச்சேரியில் ஒலிந்தியாபட்டு திருஅரசிலி உடையார் கோயிலில் உள்ள பத்தாம் நூற்றாண்டு குலோத்துங்க சோழன் கல்வெட்டில் எழுத்து சீர்திருத்தம் செய்த வரலாற்றுத் தகவல் உள்ளது என புதுச்சேரி ஆசியவியல் ஆய்வகம் முன்னாள் பேராசிரியர் கோ.விசயவேணுகோபால் தெரிவித்தார்.

மதுரையில் இன்று தொல்லியல் கழகம், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் தொல்லியல் கழகத்தின் 33-வது ஆண்டு கருத்தரங்கம், 35-வது ஆவணம் இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. தொல்லியல் கழக தலைவர் வி.மங்கையர்க்கரசி தலைமை வகித்தார். தஞ்சை செயலர் வி.செல்வகுமார் வரவேற்றார். பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலர் சொ.சாந்தலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் புதுச்சேரி ஆசியவியல் ஆய்வகம் முன்னாள் பேராசிரியர் கோ.விசயவேணுகோபால், 35-வது ஆவண இதழை வெளியிட, காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் அ.சீனிவாசன் இதழை பெற்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow