உதகையின் பழமை வாய்ந்த காவல் நிலையம் இனி குழந்தைகள் பராமரிப்பு மையம்!
கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஜான் சலீவன் உள்ளிட்ட ஆங்கிலேயர்கள், நவீன உதகை நகரை நிர்மாணித்தனர். ‘ஸ்டோன் ஹவுஸ்' எனப்படும் முதல் கல் பங்களா ஒன்றை எழுப்பி, பல்வேறு கட்டுமானங்களையும் உருவாக்கினர்.

உதகை: கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஜான் சலீவன் உள்ளிட்ட ஆங்கிலேயர்கள், நவீன உதகை நகரை நிர்மாணித்தனர். ‘ஸ்டோன் ஹவுஸ்' எனப்படும் முதல் கல் பங்களா ஒன்றை எழுப்பி, பல்வேறு கட்டுமானங்களையும் உருவாக்கினர்.
உதகை நகராட்சி மார்க்கெட் பகுதியிலுள்ள சிறிய குன்றின் மீது முதல் காவல்நிலையம் ஒன்றை கட்ட திட்டமிட்டு, 1850-ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டன. 1860-ம் ஆண்டு முதல் காவல் நிலையம் செயல்பட தொடங்கியது. இதுவே உதகையின் முதல் காவல் நிலையம். 1900-ம் ஆண்டு தொடக்கத்தில், கேரளாவில் தீவிரமாக இயங்கி வந்த ‘மாப்ளா புரட்சி’ குழுவினரின் தாக்குதலுக்கு இந்த காவல் நிலையம் உள்ளானது. 1921-ல் நடத்தப்பட்ட தாக்குதலில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் என 4 பேர் கொல்லப்பட்டனர்.
What's Your Reaction?