வறட்சியான விருதுநகரில் பன்னீர் ரோஜா சாகுபடி - உரிய விலை கிடைப்பதால் மகிழ்ச்சி

வறட்சிப் பகுதிகளில் ஒன்றான விருதுநகரில் பன்னீர் ரோஜா சாகுபடி தீவிரமடைந்துள்ளது. உரிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர். இளம் சிவப்பு நிறம் கொண்ட பன்னீர் ரோஜா பூக்கள் வாசனை மிக்கது.

Jan 20, 2025 - 18:05
 0  3
வறட்சியான விருதுநகரில் பன்னீர் ரோஜா சாகுபடி - உரிய விலை கிடைப்பதால் மகிழ்ச்சி

விருதுநகர்: வறட்சிப் பகுதிகளில் ஒன்றான விருதுநகரில் பன்னீர் ரோஜா சாகுபடி தீவிரமடைந்துள்ளது. உரிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர். இளம் சிவப்பு நிறம் கொண்ட பன்னீர் ரோஜா பூக்கள் வாசனை மிக்கது. மாலைகளாக தொடுத்து விற்பனை செய்வதுடன், ரோஸ் வாட்டர், குல்கந்து, தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரிக்கவும் இப்பூக்கள் பயன் படுத்தப்படுகின்றன.

விருதுநகர் அருகே உள்ள சூரம்பட்டியில் பல ஏக்கர் பரப்பளவில் பன்னீர் ரோஜா சாகுபடி செய்யப்படுகி றது. பொங்கல் விழா, அதைத் தொடர்ந்து கோயில் விழாக்கள், முகூர்த்த நாட்கள், அடுத்தடுத்து மாசி, பங்குனி மாதங்களில் கோயில் திரு விழாக்கள் வருவதால் பன்னீர் ரோஜாவுக்கு தொடர்ந்து நல்ல விலை கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow