உணவு சுற்றுலா: கும்பகோணம் டிகிரி காபி 

தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் ‘கும்பகோணம் ஃபில்டர் காபி’ கிடைக்கும் என்கிற பதாகைகளை அதிக அளவில் பார்க்க முடியும்.

Aug 6, 2025 - 14:35
 0  16
உணவு சுற்றுலா: கும்பகோணம் டிகிரி காபி 

தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் ‘கும்பகோணம் ஃபில்டர் காபி’ கிடைக்கும் என்கிற பதாகைகளை அதிக அளவில் பார்க்க முடியும். அந்த அளவுக்குக் கும்பகோணத்து காபி பிரபலம். வெவ்வேறு பகுதிகளில் கும்பகோணம் ஃபில்டர் காபியைக் குடித்தாலும், கும்பகோணத்தில் அதிகாலை ஒரு ஃபில்டர் காபியைப் பருகுவது தனி சுகம்!
காபி பிரியர்களுக்கோ விதவிதமான காபி ரகங்களை ருசித்துப் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆவல் இருப்பது இயல்பு. அவ்வகையில் தனித்துவமாகத் தயாரிக்கப்படும் கும்பகோணம் ஃபில்டர் காபிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

கோயில்களால் சூழ்ந்திருக்கிறது கும்பகோணம். அதிகாலையிலேயே விழித்துக்கொள்கிறது நகரம். அப்படி விழித்துக்கொள்வதில் ஃபில்டர் காபி கடைகள் முக்கியமானவை. தெருக்குத் தெரு காட்சி அளிக்கும் ஃபில்டர் காபி கடைகளின் முகப்பில் டபரா செட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பகுதி எங்கும் ஃபில்டர் காபியின் மணம் நாசியைத் துளைக்கிறது. கோயில்களுக்குச் செல்வோரும் நடைப்பயிற்சி செய்வோரும் அலுவல்ரீதியாகப் பயணம் மேற்கொள்வோரும் ஒரு ஃபில்டர் காபியைக் குடித்துவிட்டுத்தான் அடுத்த வேலையைத் தொடங்குகிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow