சர் சி.வி.ராமன் | விஞ்ஞானிகள் - 18

ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் வழியே செல்லும்போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே ’ராமன் சிதறல்’ (Raman Scattering) அல்லது ’ராமன் விளைவு’ (Raman Effect) என அழைக்கப்படுகிறது. இவ்வாறு உள்புகும் ஒளியில் உள்ள போட்டான்களுக்கும் மூலக்கூறுகளுக்கும் இடையே ஆற்றல் பரிமாற்றம் நிகழும்போது வெளிவரும் ஒளியின் அலைநீளம் மாறுகிறது. இந்தக் கண்டறிதலை 1928, பிப்ரவரி 28 அன்று ராமன் வெளியிட்டார். இந்த நாளைத்தான் 1987ஆம் ஆண்டு முதல் ’தேசிய அறிவியல் தினம்’ என்று கடைப்பிடித்து வருகிறோம்.  

Jan 20, 2025 - 19:10
 0  3
சர் சி.வி.ராமன் | விஞ்ஞானிகள் - 18

அறிவியல் துறையில் நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர், முதல் இந்தியர் சந்திரசேகர வெங்கட ராமன் (சர்.சி.வி. ராமன்). இவரின் புகழ்பெற்ற ஆராய்ச்சியான ‘ராமன் விளைவு’ கண்டறிந்த நாளான பிப்ரவரி 28 அன்று ’தேசிய அறிவியல் தினம்’ ஆக இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது.

1888, நவம்பர் 7 அன்று திருச்சியிலுள்ள திருவானைக்காவலில் பிறந்தார் ராமன். தந்தை சந்திரசேகர் ஆசிரியராக இருந்தார். பின்னர் விசாகப்பட்டினத்தில் கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றியதால் குடும்பம் அங்கே சென்றது. பள்ளிப் படிப்பை அதிக மதிப்பெண்களுடன் விசாகப்பட்டினத்தில் முடித்த சி.வி. ராமன், 1904இல் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பி.ஏ. படிப்பை முடித்தார். இயற்பியலில் முதல் இடத்தையும் தங்கப் பதக்கத்தையும் பெற்றார். 1907இல் அதிக மதிப்பெண்களைப் பெற்று முதுகலைப் பட்டத்தை முடித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow