விழுப்புரம் அருகே 1,300 ஆண்டு பழமையான பல்லவர் கால மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு
விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருவாதி கிராமத்தில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த 1,300 ஆண்டுகள் பழமையான மூத்த தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் வரலாற்று ஆய்வாள ரும், எழுத்தாளருமான கோ.செங்குட்டுவன் தெரிவித்து ள்ளார்

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருவாதி கிராமத்தில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த 1,300 ஆண்டுகள் பழமையான மூத்த தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியது: “விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருவாதி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் குபேரன் அளித்தத் தகவலின் பேரில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், தென் பெண்ணை ஆற்றின் வடக்குக் கரையில் சிறிய கோயில் அமைத்து, அம்மன் என வழிபட்டு வருகின்ற னர். இந்தச் சிற்பம் வட மொழியில் ஜேஷ்டா தேவி என்று அழைக்கப்படும் மூத்ததேவி சிற்பமாகும். பல்லவர் காலத்தைச் (கி.பி.7-8-ம் நூற்றாண்டு) சேர்ந்தது. 1,300 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.
What's Your Reaction?