48-வது சென்னை புத்தகக் காட்சியில் அமெரிக்கன் சென்டர் பூத் - என்ன சிறப்பு?
சென்னை புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்கன் சென்டர் பூத் எனும் அரங்கில், மாணவர்கள்,அறிஞர்கள், மற்றும் பொது மக்களுக்கான புத்தகங்கள் மற்றும் மின்-வள ஆதாரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்று அமெரிக்க நடப்பு துணைத் தூதர் க்வென்டோலின் லெவெல்லின் கூறியுள்ளார்.

சென்னை: “சென்னை புத்தகக் காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்கன் சென்டர் பூத் எனும் அரங்கில், மாணவர்கள்,அறிஞர்கள் மற்றும் பொது மக்களுக்கான புத்தகங்கள் மற்றும் மின்-வள ஆதாரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவை அடுத்த தலைமுறையில் மாற்றத்தை உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது,” என்று அமெரிக்க நடப்பு துணைத் தூதர் க்வென்டோலின் லெவெல்லின் கூறியுள்ளார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில், 48-வது சென்னை புத்தகக் கண்காட்சி இன்று (டிச.27) தொடங்கியுள்ளது. 900 அரங்குகளில், லட்சக்கணக்கான புத்தகங்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சி வரும் ஜன.12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த புத்தகக் காட்சியில் அரங்கு எண் (F-51)-ல் அமெரிக்கன் சென்டர் பூத் அமைக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?